ஆளுமை:சடாட்சர சண்முகதாஸ், சி.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சடாட்சர சண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சடாட்சர சண்முகதாஸ்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சர சண்முகதாஸ், சி எழுத்தாளர். யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர். இவர் புலமைப்பரிசில் மாணவனாக வேலணை மத்திய கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கழைக்கழகப் பட்டதாரியாகி, எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக மக்கள் பணிகளில் ஈடுபட்டார். இளமைக்காலத்தில் கொண்டிருந்த சேவை மனப்பாங்கு, இலட்சியநோக்கு, நேர்மைத்திறன் என்பவற்றிலிருந்து அணுவளவும் தளம்பாத சேவையாளனாக இறுதிக்காலம் வரை பணியாற்றி மக்கள் மனங்களில் நிறைந்தவர். வன்சொல் அறியாத பண்பாளர் ஆவார்.

பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் முதல் இலக்கிய நேசனாக விளங்கியவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்மன்ற வெளியீடான 'இளங்கதிர்' இதழின் ஆசிரியராக விளங்கியவர். இவர் தன்னாலியன்ற பணிகளை ஊருக்கு இறுதிவரை செய்தவர். பலரது வாழ்வுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக நின்று கைதூக்கிவிட்டவர். வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தில் அவர் பல பதவிகளை வகித்துள்ளார். உட்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக, உள்ளூராட்சி ஆணையாளராக, உட்துறை அமைச்சின் பிரதிச் செயலாளராக, கிராம அபிவிருத்தி பணிப்பாளராக, பேரவைச் செயலாளராகவும், கல்வி கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளராக, முகாமைத்துவ அபிவிருத்தி, பயிற்சிப் பணிப்பாளராகப் பல பதவிகளை வகித்து நிர்வாகத் திறமையால் ஏனையோர்க்கு மாதிரியாகத் திகழ்ந்தவர். மக்கள் மனம் நிறைந்த யாவரினதும் மதிப்புக்குரிய நிர்வாகி, சேவையாளர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 79-80