ஆளுமை:சுப்பிரமணியன், நாகராசன்
பெயர் | சுப்பிரமணியன் |
தந்தை | நாகராசன் |
தாய் | நீலாம்பாள் |
பிறப்பு | 1942.12.25 |
ஊர் | முள்ளியவளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியன், நாகராசன் (1942.12.25 - ) முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகராசன்; தாய் நீலாம்பாள். இவர் முள்ளியவளை சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தா கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாக பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு பட்டம் பெற்றதோடு அதே பல்கலைக்கழகத்தில் ஈழத்து தமிழ் நாவல்கள் என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972ஆம் ஆண்டு முதுகலை பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பலக்லைக்கழகத்தின் தமிழ்த் துறையில் தமிழ் யாப்பு வளர்ச்சி என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டு கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.
இலங்கைப் பல்கலைக்கழகம், வித்தியாலங்காரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறையில் 1970 - 1975ஆம் ஆண்டு காலங்களில் துணைவிரிவுரையாளராக பணியாற்றிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளரானார். தமிழ்த் துறையிலே 24 ஆண்டுகள் பணியாற்றி துறையின் தலைவராகவும், இணைப் பேராசிரியராகவும் உயர்வுபெற்று 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விருப்ப ஓய்வுப் பெற்றார்.
இந்தியச் சிந்தனைமரபு, நால்வர் வாழ்வும் வாக்கும், ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம், தமிழ் ஆய்வியலில் க. கைலாசபதி, நால்வர் வாழ்வும் வாக்கும், கந்தபுராணம்: ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள், காலத்தின் குரல், திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கதைகள் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 184-187