ஆளுமை:செல்லையா, கே. கே. வி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையா
பிறப்பு
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, கே. கே. வி. யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். பின் சென்னை சென்று சித்திரக்கலையை முறையாகப் படித்ததோடு நண்பர்களோடு சேர்ந்து நாடகங்கள் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார்.

இவரது நாடக தொழிற்பாடு 1941இல் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையில் ஆரம்பித்தது. கிராமப்புறங்களில் நாடகத் தரத்தை உயர்த்த நடிகராக , இயக்குனராக, ஒப்பனையாளராக பணிபுரிந்து வந்த கே. கே. வி. செல்லையாவுக்கு கிடைத்த வரவேற்பால் அதைத்தொடர்ந்து நகர்ப்புற நாடக களத்திலும் பணியாற்றினார்.

இவரால் நெறியாள்கை செய்யப்பட்ட நாடகங்களில் அல்லியருச்சுனா, லவகுசன், பவளக்கொடி, நாட்டாண்மை நாகமணி, ஜெயக் கொடி, சிங்கப்பூர் சிங்காரம், ஒரு பிடி அரிசி ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 18-32