ஆளுமை:தில்லைச்சிவன், தில்லையம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லைச்சிவன்
தந்தை தில்லையம்பலம்
தாய் பொன்னம்மையார்
பிறப்பு 1928.01.05
இறப்பு 2004.11.26
ஊர் சரவணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைச்சிவன் என்று அறியப்படும் தி. சிவசாமி (1928.01.05 - 2004.11.26) வேலணை, சரவணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை தில்லையம்பலம்; தாய் பொன்னம்மையார். இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலையில் கல்வி கற்று 19லாம் ஆண்டில் நல்லூர் ஆசிரியர் கலாசாலையில் பயின்று 1955இல் ஆசிரியரானார். வேலணை ஆத்திசூடி வித்தியாசாலையில் அதிபராக பணியாற்றி 1988இல் ஓய்வுபெற்றார்.

இவர் தனது பதினெட்டாவது வயதில் 1946ஆம் ஆண்டு மறுமலர்ச்சி பத்திரிகையில் பட்டணத்து மச்சினி எனும் கவிதையை எழுதி கவிதை உலகில் காலடி பதித்தார். இவரது கவிதைகள் வீரகேசரி, முகில், மின்னொளி, வீரன் போன்ற பல பத்திரிகைகளில் வெளியாகின. தீவிர தமிழரசு தொண்டனாகவும் காணப்பட்டார். இவர் 1950-1952களில் 'கலைச்செல்வி' எனும் மாத வெளியீட்டை நடாத்தி அதன் ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் கனவுக் கன்னி, தாய், தில்லைமேடைத் திருப்பாட்டு, பாப்பா பாட்டுக்கள், வேலணைத் தீவுப் புலவர்கள், தாழம்பூ, அந்தக்காலக் கதைகள், நாவலர் வெண்பா, பூஞ்சிட்டு, தில்லைச்சிவன் கவிதைகள், சிறுவர் கதைப் பெட்டகம், ஆசிரியை ஆகினேன், படைப்போம் பாடுவோம், காவல் வேலி தந்தை செல்வா காவியம், பள்ளம் புலத்து முருகன் பதிகம், ஐயனார் அருள் வேட்டலும் திருவூஞ்சலும் முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 270-273
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 19
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 77-79