ஆளுமை:பித்தன் ஷா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 25 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீராஷா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீராஷா
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீராஷா, கே. எம். மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புதுமைப்பித்தனின் கதைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு பித்தாகி பித்தன் என்ற புனைப் பெயரில் சிறுகதைகள் படைக்கத் தொடங்கினார்.

1944ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய இவர் அக்காலப் பகுதியில் முன்னாள் இந்து கலாசார அமைச்சராக விளங்கிய செல்லையா இராசதுரையுடன் இணைந்து லங்கா முரசு என்ற பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். ஆறு இதழ்கள் வரை வெளியான அப்பத்திரிகையில் தான் இவருடைய முதல் சிறுகதையான இருள் என்ற முதலாவது சிறுகதை வெளியானது. இவரது காத்திரமான இலக்கியப் படைப்புகளில் பாதிக் குழந்தை, தாம்பத்தியம் ஆகியவை தேசிய ரீதியில் பாரட்டப்பட்டு பிரசித்திப் பெற்றவையாகும். இவற்றைத் தவிர மனச்சாந்தி, தனிமை, இருட்டு, நத்தார் பண்டிகை, வேதவாக்கு, ஊதுகுழல், முதலிரவு, முள்ளும் மலரும், ஊர்வலம், தாகம், விடிந்ததும் விடியாததும், ஒரு நாள்ப் பொழுது, அறுந்த கயிறு, திருவிழா, சாந்தி ஆகிய சிறுகதைகளையும் இவர் படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 79-82
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பித்தன்_ஷா&oldid=167515" இருந்து மீள்விக்கப்பட்டது