ஆளுமை:மகாதேவன், இளையப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாதேவன், இளையப்பா
தந்தை இளையப்பா
பிறப்பு 1924.09.27
இறப்பு 1982.12.25
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவன், இளையப்பா (1924.09.27 - 1982.12.25) தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரில் நன்கறியப்பட்டவர்; யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கியத்துறையில் நாடக ஆசிரியர், நாவலாசிரியர், விஞ்ஞானக் கட்டுரையாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், ஆசிரியர் என பல பரிணாமங்களை இவர் பெற்றிருந்தார்.

தென்னவன் பிரமராஜன், விதி, இரு சகோதரர்கள், பத்தினியா பாவையா, வீரபத்தினி, நளதமயந்தி என்பன இவரால் யழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட நாடகப் பிரதிகளாகும். வாடிய மலர்கள், மணிபல்லவம் கேட்டதும் நடந்ததும் என்பன இவரது நாவல்களாகும். அவன் சுற்றவாளி என்ற குறுநாவலையும், 'வானவெளியில்' என்ற விஞ்ஞான அறிவியற் கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். இவர் Treasure Island என்னும் ஆங்கில நாவலை மணிபல்லவம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.

யாழ் தேவன், தேவன் யாழ்ப்பாணம், ஸ்கோடா போன்ற பெயர்கள் இவருடைய புனைபெயர்களாகும்.. இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தேவன்- யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. காந்தியக்கதைகள் என்ற தொகுதியிலும் இவரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 122-124
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 38
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 288

வெளி இணைப்புக்கள்