ஆளுமை:கோவிந்தராஜ், கிருஷ்ணசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோவிந்தராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோவிந்தராஜ்
தந்தை கிருஷ்ணசாமி
பிறப்பு 1949
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தராஜ், கிருஷ்ணசாமி (1949 - ) மாத்தளை, அங்கும்புற தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கிருஷ்ணசாமி. தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாவது வரை படைத்த இவர் என்சல் கொல்ல முஸ்லிம் மகா வித்தியாலயம், றம்புக் எல முஸ்லிம் மகா வித்தியாலயம், மாத்தளை ஆலோக்க வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விப் பயின்றார். 1968இல் தினபதியின் சிறுகதைத் திட்டத்தின் மூலம் எழுத்துலகப் பிரவேசம் செய்தார்.

தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, காங்கிரஸ், சுடர், கதம்பம், என்று எழுதத் தொடங்கிய இவர் 1970 இலிருந்து 1981 வரை வீரகேசரியில் பணி புரிந்தார். பசியாவரம் என்னும் சிறுகதைத் தொகுதியும், தோட்டத்து கதாநாயகர்கள் என்னும் சிறுகதைத் தொகுதியும் இவருடைய நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும் பத்திரிகை எழுத்தை விடவும் வனொலி, தொலைக்காட்சி, மேடை ஆகிய தளங்களை தனது படைப்பிற்காக மிகுந்த லாவகத்துடன் பயன்படுத்திக் கொண்டார். இவரது தொலைக்காட்சி நாடகங்களில் மலையோரம் வீசும் காற்று (ரூபவாஹினி), மாப்பிள்ளை வந்தார், அரும்பு, மனிதன், நல்லவர்கள், திருப்பம், புதுக்குடும்பம், நிஜத்தின் நிழல் (சக்தி டிவி) ஆகியன குறிப்பிடத்தக்கன.

இவரது பசியாவரம் என்ற நூலுக்கு மத்திய மாகாண சபையின் சாஹித்திய விருதும், யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் சான்றிதழும் கிடைத்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 212-214