ஆளுமை:பீர்முகம்மது, எம். எம்.
பெயர் | பீர்முகம்மது |
பிறப்பு | |
ஊர் | |
வகை | பேச்சாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பீர் முகம்மது ஓர் பேச்சாளர். இவர் பண்டாரவளை அட்டம்பிட்டியாவில் ஆசிரியராகவும், ஹற்றன் ஹைலன்ட் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் மாத்தளை இஸ்லாமிய தமிழ் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் செயற்திறன் மிக்க அதன் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ மற்றும் தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். கலாநிதிகள் க. அருணாசலம், துரை மனோகரன், கலாபூஷணம் சாரல்நாடன், கவிஞர் சு.முரளிதரன் போன்ற விற்பன்னர்களைக் கொண்ட சாகித்திய குழுவில் உறுப்பினராக இவர் இடம்பெற்றது இவரது திறமைக்குச் சன்றாகும்.
கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாவில் ஒரு நாள் பேச்சாளராக ஏனைய நாட்களில் பார்வையாளராக இவரைத் தவறாமல் காணலாம். மேலும் பண்ணாமத்துக் கவிராயரின் காற்றின் மௌனம், ஏ.எம்.புவாஜியின் அல்லாமா உவைஸ் நூல் வெளியீட்டு விழாக்களில் இவரது பங்களிப்பு பிரதானமானது ஆகும். யாத்ரா சஞ்சிகை அறிமுக விழா மற்றும் கெக்கிராவ சஹானா, உக்குவளை அக்றம், இளையநிலா பஸ்மினா அன்சர், பாலரஞ்சனி ஜெயப்பால் என இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களிலும் பேச்சாளராகப், பிரதி பெறுபவராகத் தன்னைப் பதிவு செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 141-145