ஆளுமை:டேவிட், கே. ஆர்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டேவிட், கே. ஆர்.
பிறப்பு
இறப்பு 1945.07.07
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே.ஆர்.டேவிட் (1945.07.07-) யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார்.

கடமையின் நிமித்தமாக 1971இல் நுவரேலியா சென்றிருந்த இவர் அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலாக படைத்தார். சிரித்திரன் இதழில் இவர் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' எனும் குறுநாவல் மீரா பதிப்பகத்தால் நூலுருப்பெற்றது. தமிழ் தேஇயத்தின் சுவடுகளின் பதிவாக 'ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை' என்ற குறுநாவல் 1987இல் முரசொலி வெளியீடாக நூலுருப்பெற்றது. இவற்றுடன் 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' எனும் நாவலையும், "ஒரு பிடி மண்” என்ற சிறுகதை தொகுப்பையும் ஆக்கியுள்ளார்.

இவரது படைப்பான ”எழுதப்படாத வரலாறு” என்ற சிறுகதை 2009ஆம் ஆண்டில் தரம் 8 இற்கான தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற பாடநூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது படைப்பாற்றலுக்காய் 2006-2008ஆம் ஆண்டுகளுக்குரிய கனகசெந்தி கதா விருதும், 2011 இல் கலாபூஷணம் விருதும், 2013 இல் சிறந்த எழுத்தாளருக்கான இதழியல் விருதும், "மண்ணின் முனகல்" என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதும், பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 இற்கான தமிழியல் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 57
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 130-133
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டேவிட்,_கே._ஆர்.&oldid=167106" இருந்து மீள்விக்கப்பட்டது