ஆளுமை:சேரன், உருத்திரமூர்த்தி
| பெயர் | சேரன் |
| தந்தை | உருத்திரமூர்த்தி |
| பிறப்பு | |
| ஊர் | அளவெட்டி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சேரன், உருத்திரமூர்த்தி யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை உருத்திரமூர்த்தி. இவர் கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன. மேலும் இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலுக்கு, காடாற்று ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 183
- நூலக எண்: 52 பக்கங்கள் 02
- நூலக எண்: 4428 பக்கங்கள் 441-442
- நூலக எண்: 13958 பக்கங்கள் 97-101