ஆளுமை:நாகலிங்கம், அருணாசலம்
பெயர் | நாகலிங்கம் |
தந்தை | அருணாசலம் |
பிறப்பு | 1901.02.25 |
இறப்பு | 1979.03.19 |
ஊர் | காரைநகர் |
வகை | எழுத்தாளர், சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகலிங்கம், அருணாசலம் (1901.02.25 - 1979.03.19) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர், சமூகசேவையாளர். இவரது தந்தை அருணாசலம். இவர் காரைநகர் அமெரிக்க மிசன் தமிழ், ஆங்கிலப் பள்ளியிலும், பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் தனது 19ஆவது அகவையில் இவர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்து தாய்ப்பிங் ஏழாம் எட்வர்டு அரசர் பாடசாலையில் கல்வி பயின்று மலாயா திறைசேரியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
மலேசியாவில் கோலா பிலா நகரில் கந்தசுவாமி கோவிலைப் புனரமைக்க உதவிகள் புரிந்தார். அத்துடன் அவர் காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். உலகப் போர் முடிவடைந்த பின்னர் 1947 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய இவர் மலாய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்தில் பல சமூக சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். காரைநகர் சிவன் கோவில் 1968 இல் புனரமைக்கப்பட்ட போது அதன் கூட்டுச் செயலராக இருந்தார். சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்ற ஒரு நூலையும் இவர் எழுதியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 27-30