ஆளுமை:இராசையா, செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா
தந்தை செல்லையா
பிறப்பு 1912.11.15
இறப்பு 1975
ஊர் தாவடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, செல்லையா (1912.11.15 - 1975) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், இவரது தந்தை செல்லையா. 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்று கல்யாணசுந்தர தேசிகரிடம் தேவார இசையினையும், நெல்லைரங்கப்பா அவர்களிடம் கர்நாடக வாய்ப்பாட்டு இசையையும் பயின்றார். பின் ஈழத்திற்கு திரும்பி குப்பிளான் செல்லத்துரை அவர்களிடம் சிறப்பாக திருப்புகழ் பாடுவதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். 1959இல் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தேவார இசை பகுதி நேர ஆசிரியராகவும், சிவதொண்டன் நிலையத்தில் தேவார ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

ஈழத்தில் இவருடைய இசை அரங்குகளுக்குப் பக்க வாத்தியமாக வி.பரமேஸ்வர ஐயர், எஸ்.சோமஸ்கந்தசர்மா, ஏ.சிவசாமி, வி.உருத்திரபதி, கே.சித்திவிநாயகம், எஸ்.சர்வேஸ்வரசர்மா ஆகியோர் வயலினும், ஏ.நமசிவாயம், வி. உருத்திராபதி ஆகியோர் புல்லாங்குழலும், என். தங்கம், வி. கணபதியாபிள்ளை, எம். என்.செல்லத்துரை, ஏ.எஸ்.ராமநாதன் ஆகியோர் மிருதங்கமும் வாசித்து சிறப்பித்துள்ளனர். இவருடைய பண்ணிசையானது பக்தியும், ஜனரஞ்சகமும், சில இடங்களில் நெரடான லய நுட்ப சங்கதிகள் அமைந்ததாகவும் அமையும்.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 119-122