ஆளுமை:குமாரசாமிப் புலவர், தம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசாமிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசாமிப் புலவர்
தந்தை தம்பிப்பிள்ளை
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1895.08.17
இறப்பு 1982.02.15
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமிப் புலவர், தம்பிப்பிள்ளை (1895.08.17 - 1982.02.15) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; தாய் சிவபாக்கியம். 1910ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்ற இவர் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆச்சாபுரம் தேவாரப் பாடசாலையில் முறைப்படி ஐந்து ஆண்டுகள் வரை தேவார இசைப் பயின்றதோடு, அதனைத் தொடர்ந்து 1917 வரை தருமபுர ஆதீனத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சிறப்புறக் கற்றார். 1929ஆம் ஆண்டில் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தேவார இசை ஆசிரியராக இவர் நியமனம் பெற்றார்.

இவர் தனது பண்ணிசைக் கச்சேரிகளை ஈழத்தின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும், மலேசியாவிலும் நிகழ்த்தியுள்ளார். 1922ஆம் ஆண்டில் கொக்குவில் சி ஞானபண்டித வித்தியாசாலைஅயை நிறுவியும், வித்தியாலயத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது பண்ணிசை அரங்குகளினூடாக வரும் பணத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 113-115