ஆளுமை:சங்கரசிவம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கரசிவம்
தந்தை கந்தையா
பிறப்பு 1939.06.15
இறப்பு 1988.05.17
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கரசிவம், கந்தையா (1939.06.15- 1988.05.17) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் தனது ஆரம்பக்கல்வி முதல் க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (1944 - 1956 ) பயின்று உதவி ஆசிரியராக 1960ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலையில் நியமனம் பெற்றார். 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1988ஆம் ஆண்டு வரை செயன்முறை பரீட்சகராகவும், வினாப் பத்திரத் தயாரிப்பாளராகவும், மீளாய்வுக் குழுவினராகவும் கடமையாற்றினார்.

இவருடைய ஆரம்ப மிருதங்க ஆசிரியர் காலஞ்சென்ற அம்பலவாணர் ஆவார். மேலும் மிருதங்க வித்துவான்களான சின்னராஜா, ஏ. எஸ். ராமநாதன், எம். என். செல்லத்துரை ஆகியோர்களிடமும் இக் கலையைப் பயின்றார். இவரது மிருதங்க அரங்கேற்றம் 1972ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இக் காலங்களிலேயே வட இலங்கைச் சங்கீத சபை பரீட்சைகளிலும் தோற்றி 1976ஆம் ஆண்டு மிருதங்க ஆசிரியர் தராதரம் பெற்றார். 1979ஆம் ஆண்டு மிருதங்க சுருக்க விளக்கம் என்னும் நூலினை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 91-92