ஆளுமை:தட்சணாமூர்த்தி, விசுவலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தட்சணாமூர்த்தி
தந்தை விசுவலிங்கம்
தாய் இரத்தினம்
பிறப்பு 1933.08.26
இறப்பு 1975.05.13
ஊர் அளவெட்டி
வகை தவில் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தட்சணாமூர்த்தி, விசுவலிங்கம் (பி. 1933. ஆகஸ்ட் 26) யாழ்ப்பாணம், இணுவிலில் பிறந்து அளவெட்டியில் வசித்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம்; தாய் இரத்தினம். இவர் தனது எட்டாவது வயதிலேயே கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

1959ம் ஆண்டு சென்னைத் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பெற்ற இசைவிழாவில் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளையின் நாதஸ்வரத்திற்கு தவில்மேதை நீடாமங்கல சண்முக வடிவேலு அவர்களுடன் இணைந்து தட்சணாமூர்த்தி அவர்களும் தவில் வாசித்து பெருஞ்சிறப்பு பெற்றுள்ளார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தவில் கச்சேரி செய்தார். கற்பனைச்சுரங்கம், கரகவேக கேசரி, தவில் வாத்திய ஏகச் சக்கிராதிபதி, லயஞான குபேர பூபதி போன்ற பல பட்டங்கள் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 546-547
  • நூலக எண்: 7474 பக்கங்கள் 82-85

வெளி இணைப்புக்கள்