ஆளுமை:அம்பிகைபாகன், இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பிகைபாகன்
தந்தை இராமலிங்கம்
பிறப்பு 1929.02.27
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பி என்று நன்கறியப்படும் அம்பிகைபாகன், இராமலிங்கம் (1929.02.27 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

1950ஆம் ஆண்டுகளில் எழுதத்தொடங்கி தினகரனின் இலட்சியச் சோடி என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர் கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், மருத்துவ தமிழ் முன்னோடி, Lingering Memories, Scienrtfic Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்கு செய்த அளப்பறிய சேவைகளில் மருத்துவ தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களை தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும் கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்க பூர்வமாக அலோசனை வழங்கி சாத்தியமாக்கியமையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் அந்த மருத்துவ மேதை மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவான நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

உலகத்தமிழாரராய்ச்சி மாநாட்டு விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’, கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது, அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது, கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது, அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 53-55