ஆளுமை:ரமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரமணி
பிறப்பு 1942
ஊர் அளவெட்டி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி. சிவசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட ரமணி (1942 - )யாழ்ப்பணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒவியர், சிற்பக் கலைஞர். இவர் எஸ்.பொன்னம்பலம், ஓவியர் மாற்கு ஆகியோரிடம் ஆரம்ப பயிற்சியைப் பெற்று பின்னர் விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் 1960 - 64ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பயின்றதோடு அரசினர் நுண்கலைக் கல்லூரியிலும் 5 வருட காலம் பயிற்சி பெற்று டிப்ளோமா பட்டத்தை பெற்றுக்கொண்டார். தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக 3ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பெயர் பெற்ற சிற்பங்கள் பலவற்றைப் படைத்துள்ள ரமணி அவர்கள் அவற்றின் உருவ நேர்த்திக்காகவும் கூட்டொழுங்கமைவிற்காகவும் பெயர் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது வருகை விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர் ஓய்வு பெற்ற ஓவிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 40-41
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 156-158


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரமணி&oldid=166669" இருந்து மீள்விக்கப்பட்டது