ஆளுமை:கணபதியாபிள்ளை, வீரவாகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:51, 17 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணபதியாபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதியாபிள்ளை, வீரவாகுப்பிள்ளை
தந்தை வீரவாகுப்பிள்ளை
தாய் அம்மணி
பிறப்பு 1910.01.10
இறப்பு 1987
ஊர் மதுரா, இந்தியா
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீ. கணபதியாபிள்ளை (1910.01.10 - 1987) இந்தியா, மதுரா நகரத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை வீரவாகுப்பிள்ளை; தாய் அம்மணி. இவர் தமது ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று கொண்டிருக்கையில் இடையில் கல்வியை நிறுத்திவிட்டு மிருதங்க வாத்தியம் பயில ஆரம்பித்தார். இவருக்கு குருவாக ஒருவரும் இருக்கவில்லை தாமாகவே சிறு சிறு கச்சேரிகள், கூத்து, நடனம் என்பவற்றிகு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து பெரிய வித்துவான்களின் கலை நுட்ப்பத்தைப் பின்பற்றி தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.

இவர் இந்தியாவிலிருந்து 1932ஆம் ஆண்டு என். எஸ். கிருஷ்ணனுடன் இலங்கை வந்தார். இங்கு வந்து சிறு சிறு கச்சேரிகளும் நாடகங்களுக்கும் பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்த போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தரமற்ற அதிதிக் கலைஞனாக கலை சேவை புரிந்து கொண்டிருந்தார். பின் 1944 தொடக்கம் 1952 வரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிரந்தர நிலைய வித்துவானாகினார். வானொலிக் கலைஞனாக மற்றும் நின்று விடாமல் மிருதங்கம், டோலக், கஞ்சிரா, கடம், டோல்கி, தபேலா ஆகிய வாத்தியங்களையும் வாசித்து வந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தில் பிரம்மஶ்ரீ வை.நித்தியானந்தசர்மா அவர்களின் கதாபிரசங்கம், ஈழத்து சுந்தராம்பாள் எனும் கனகாம்பாள் சதாசிவம் அவர்களின் பக்தி இசை, வி.ரீ.வி சுப்பிரமணியம் அவர்களின் பண்ணிசை ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் மேலும் சில முதுகலைஞர்களின் இசையரங்குகளுக்கும் மிருதங்கம், கல்ஞ்சிரா போன்ற வாத்தியங்களை பக்கவாத்தியமாக 1982ஆம் ஆண்டு வரை வாசித்துள்ளார். இவருக்கு கரவேகசுரஞானபூபதி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

{{வளம்|7474|39-41}