ஆளுமை:இராசா, கந்தசுவாமி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:10, 17 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசா, கந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இராசா, கந்தசுவாமி |
தந்தை | கந்தசுவாமி |
தாய் | சுப்புலஷ்மி |
பிறப்பு | 1907.02.10 |
இறப்பு | 1994.01.01 |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க. இராசா (1907.02.10 - 1994.01.01) யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசுவாமி; தாய் சுப்புலஷ்மி. இவர் நாதஸ்வர இசையை தனது உறவினரும் தேவஸ்தான வித்துவானும் ஆகிய குழந்தைவேலு என்பவரிடம் கற்றார். இவரது நாதஸ்வர வாசிப்பானது ஸ்வரசுத்தமும், லயசுத்தமும், விவகாரமும், பிர்கா சங்கதிகளும் நிறைந்த சுகமுடையதாகும்.
இவரது இசையானது ஈழநாட்டின் பல ஊர்களிலும், பிரபலமான ஆலயங்கள் தோறும் நடைப்பெற்று வந்துள்ளது. அக் காலத்தில் அளவெட்டி எஸ்.பி.எஸ்.திருநாவுக்கரசு, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, மவிட்டபுரம் எம்.எஸ்.சண்முகநாதன், திருப்பங்கூர் இராமையா, கலாசூரி என்.கே.பத்மநாதன் போன்ற நாதஸ்வர கலைஞர்கள் இவருடன் இணைந்து வாசித்து வந்துள்ளார்கள்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 31-34