ஆளுமை:சோமசுந்தரம், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:27, 17 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரம், நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
தாய் விஜயம்
பிறப்பு 1895
ஊர் புத்துவாட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா. சோமசுந்தரம் (1895 - ) யாழ்ப்பாணம், புத்துவாட்டியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் விஜயம். இவர் வயலின் இசைக் கருவியைப் பயின்றதோடு மட்டுமன்றி சாரங்கி எனும் கருவியையும் தந்தையாரிடம் பயின்றார். தனது பதினோறாவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்பு செய்ய ஆரம்பித்த இவர் 1900த்தின் ஆரம்பத்தில் முதன் முதலாக இசை அரங்குகளில் வயலின் இசை பயன்படுத்தப்பட்ட போது வைத்தீஸ்வரகுருக்கள், பரமேஸ்வரஐயர், சங்கரசுப்பையா போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் இவர் வயலின் வாசித்துள்ளார்.

தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவைகள் இயற்றிப் பாடியும் வாசித்துமுள்ளார். இவற்றுள் சாமி உன் சந்நிதியே தஞ்சம் என்று நம்பி வந்தேன் என்னும் கீர்த்தனை குறிப்பிடக் கூடியது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 13-17


வெளி இணைப்புக்கள்