ஆளுமை:சந்திரசேகரன், சோமசுந்தரம்
பெயர் | சந்திரசேகரன் |
பிறப்பு | |
ஊர் | பதுளை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரசேகரன் பதுளையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் தமது ஆரம்பக் கல்வியை பதுளை ஊவாக் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று 1964இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்து பயின்றார். கல்வியியலைப் பயின்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த இவர் அத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றதோடு பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின் சிறிது காலம் இலங்கை வங்கியில் மொழிப்பெயர்ப்பாளராகவும், பாடசாலை ஆசிரியராகவும், ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளராகவும் கடமையாற்றி 1975ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார். மேலும் 1977இல் யப்பான் நாட்டு அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் உயர் பட்டம் பெற்றார்.
கிட்டத்தட்ட பன்னிரெண்டுக்கும் மேற்ப்பட்ட கல்வியியல் நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது முதலாவது நூல் இலங்கை இந்தியர் வரலாறு என்னும் பொருளில் 1989இல் வெளியானது. இவற்றுடன் இலங்கையில் வெளிவரும் நாளாந்த, வாராந்த தமிழ் செய்தித்தாள்களில் நிதானமான பார்வையுடன் 200க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய கல்வித்துறை அனுபவம், எழுத்துக்களின் காரணமாக இவர் இலங்கை தேசிய ஆசிரியர் கல்வி அதிகார சபை, தேசிய நூலக சபை, தமிழ் இணைய வழிக்காட்டுக் குழு, கலைச்சொல்லாக்க குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகையின் ஆசிரியர் பீட அலோசகரகவும் நியமனம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4293 பக்கங்கள் 91-93