ஆளுமை:கந்தசாமி, வி. கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி, வி. கே.
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புதுமைலோலன் எனும் புனைப்பெயரில் பிரபல்யமான வி. கே. கந்தசாமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா. இவர் யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை நாவலர் வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியிலும் கல்வியைக் கற்றதோடு பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பத்தொன்பது வயதில் வெளிவந்தார். கிற்கிராங்கொடை, வெலிகந்த, யாழ்ப்பாணம், பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் ஆனைக்கோட்டை தமிழ் கலவன் பாடசலையில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.


இவரது முதலாவது சிறுகதை 1952ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி சுதந்திரனில் வெளிவந்தது.அதனைத் தொடர்ந்து இவருடைய படைப்புக்கள் ஈழகேசரி, சுதந்திரன், ஆனந்தன், புதினம், ஐக்கிய தீபம், விவேகி முதலான ஈழத்துப் பத்திரிகைகளிலும் காதல், மஞ்சரி, பிரசண்ட விகடன் போன்ற தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. பிச்சைக்காரி, சிந்தனை, அவதாரம், புகைந்த உள்ளம், அப்பேலங்கா, அழகு மயக்கம் முதலானவை இவருடைய குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும். மேலும் அன்பு மகள் அன்பரசிக்கு, புதுமைலோலன் கதைகள், கசங்கிய ரோஜா, தாயின் மணிக்கொடி போன்ற இவரது படைப்புக்களையும் குறிப்பிடலாம்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 113-115
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 87-90


வெளி இணைப்புக்கள்

வி. கே. கந்தசமி பர்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தசாமி,_வி._கே.&oldid=166193" இருந்து மீள்விக்கப்பட்டது