ஆளுமை:சண்முகரத்தினம், நவரத்தினம்
பெயர் | சண்முகரத்தினம், நவரத்தினம் |
தந்தை | நவரத்தினம் |
தாய் | திலகவதி |
பிறப்பு | 1911.06.21 |
இறப்பு | 1987 |
ஊர் | உடுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ந. சண்முகரத்தினம் (1911.06.21 - 1987) யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நவரத்தினம்; தாய் திலகவதி. இவர் தனது ஏழாவது வயதில் இந்தியாவிற்குச் சென்று திருநெல்வேலி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் வாய்ப்பாட்டு இசையையும், ஜமீந்தார் பாடசாலையில் கல்வியும் கற்றார். 1926 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சிரேஷ்ட வகுப்பு வரை கல்வி பயின்றார். மேலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று சங்கீதபூஷணம் பட்டப்படிப்பை மேற்கொண்டு அதிலும் முதலாம் தரத்தில் சித்திப் பெற்று இசைக்கான தங்கப் பதக்கத்தை பெற்றுச் சாதனை புரிந்தார்.
திருச்சி வானொலிக் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் இசை நிகழ்ச்சிகளை செய்துள்ள இவர் ஈழத்திலுள்ள பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டைத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் இசையாசிரியராகக் கடமைபுரிந்துள்ளார். நாதம் என்ற மாத இதழை சில ஆண்டுகளாக வெளியிட்டு அருந்தொண்டாற்றினார். அத்தோடு வட இலங்கை சங்கீத சபையின் இசை, மிருதங்கம் ஆகிய பரீட்சைகளுக்கும் தேர்வாளராக கடமையாற்றியுள்ளார்.
இவரது இசைச் சேவைக்காக இவருக்கு சங்கீதரத்தினம், கானவித்தியாபூஷணம், இசைப்புலவர், இசைச் சக்ரவர்த்தி, இசைமாமணி, இசைவேந்தர், கலைச்சுடர், கானவாரிதி, ஏழிசைக்குரிசில் ஆகிய பட்டங்களை பல இசை நிறுவனங்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 06-10