ஆளுமை:பேரம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:12, 16 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேரம்பலம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம் ஓர் நாடகக் கலைஞர். ஆரம்ப கல்வியை முடித்து அர்ச். சூசையப்பர் கல்லூரியிலே தங்கப் பதக்கம் பெற்ற இவர் சர்வகலாசாலையிலும், இலங்கையிலும், இந்தியாவிலும் ஏராளமான நாடகங்களில் நடித்ததோடு பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுமுள்ளார். மதுரையில் இவர் நடித்து தயரித்த நாடகங்களுள் நரகாசுரன், வள்ளி திருமணம், பக்த துருவன், சிறு தொண்டனார், பிலோமினா அம்பாள் ஆகியவை தமிழ் நாட்டவரால் பாராட்டப்பட்டவை ஆகும்.

இவர் இலங்கை வானொலியில் தமிழ் நாடகங்களிலும், ஆங்கில நடகங்களிலும் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பங்காற்றி வருகின்றார். 1968இல் திருநாவுக்கரசு நாயணார் நாடகத்தை நடித்து தயரித்து அளித்த இவர் சானாவின் சரித்திர நாடகமாகிய சாணக்கியனில் சாணக்கியனகவும் நடித்து பலரது பாராட்டுக்ளையும் பெற்றார். நடிப்புத் திறமையோடு ஒரு நடிகனுக்கு வேண்டிய சகல நற் குணங்களும் இருப்பதைப் போல தயாரிப்புத் திறமையோடு ஒரு தயரிப்பளனுக்கு தேவையான சகல நற்குணங்களும் இவரிடம் காணப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 76-78
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பேரம்பலம்&oldid=166149" இருந்து மீள்விக்கப்பட்டது