ஆளுமை:பூபாலபிள்ளை, சதாசிவம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூபாலபிள்ளை, சதாசிவம்பிள்ளை
தந்தை சதாசிவம்பிள்ளை
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1856
இறப்பு 1921
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. பூபாலபிள்ளை (1856 - 1921) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சதாசிவப்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் இளமையிலே தமது ஊரிலுள்ள கிறிஸ்தவ மத்திய கல்லூரியில் பயின்று ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சியும் திறமையும் பெற்று விளங்கியதோடு தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், சித்தாந்த சாஸ்திரங்களையும் இவர் முறையே வல்லவை இயற்றமிழ் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கம் பிள்ளை அவர்களிடம் பயின்றார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இவர் அரசாங்க சேவையில் எழுது வினைஞராக ஏறக்குறைய 30 ஆண்டுகள் வரையில் சேவை செய்தார்.

திருமுருகர் பதிகம், சீமந்தனி புராணம், விநாயகர் மான்மியம், புளியநகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர் பதிகம், சிவதோத்திரம், முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை, அரசடி கணேசர் அகவல், கணேசர் கலிவெண்பா, தமிழ் வரலாறு போன்றன இவர் இயற்றிய நூல்களாகும். இவரது சமயம் தொடர்பான நூல்களை 1923ஆம் ஆண்டு திருமலை செ. வெ. ஜம்புலிங்கம்பிள்ளையர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 227-228
  • நூலக எண்: 963 பக்கங்கள் 174
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 129-140
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 89


வெளி இணைப்புக்கள்