ஆளுமை:தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 11 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை |
தந்தை | வைரவநாதபிள்ளை |
தாய் | பெருந்தேவியம்மாள் |
பிறப்பு | 1832.09.12 |
இறப்பு | 1901.01.01 |
ஊர் | சிறுப்பிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வை. தாமோதரம்பிள்ளை (1832.09.12 - 1901.01.01) யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை; தாய் பெருந்தேவியம்மாள். உரையும் பாட்டுமாகச் சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய பல நூல்களை எழுதியதுடன், கவிகளையும் பாடியுள்ள இவர் ஏழாலையில் தமிழ் வித்தியாசாலை ஒன்றை அமைத்துள்ளார்.
வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல் காப்பியம்- பொருளதிகாரம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், இலக்கணவிளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகப்புராணம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களை இவர் பதிப்பித்தும், கட்டளைக் கலித் துறை, சைவமகத்துவம், சூளாமணி வசனம், நட்டசத்திரமாலை போன்ற நூல்களை எழுதியுமுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 221
- நூலக எண்: 341 பக்கங்கள் 14-19
- நூலக எண்: 3003 பக்கங்கள் 68-70
- நூலக எண்: 963 பக்கங்கள் 152-156
- நூலக எண்: 13816 பக்கங்கள் 83-95