ஆளுமை:தாமரைத் தீவான், சோமநாதர்
பெயர் | தாமரைத் தீவான் |
தந்தை | சோமநாதர் |
தாய் | முத்துப்பிள்ளை |
பிறப்பு | 1932.07.24 |
ஊர் | ஈச்சத்தீவு, திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோ. முத்துப்பிள்ளை எனும் இயற் பெயரைக் கொண்ட தாமரைத் தீவான் (1932.07.24 - ) திருகோணமலை ஈச்சத்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சோமநாதர்; தாய் முத்துப்பிள்ளை. இவர் திருகோணமலை தாமரைவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், திருகோணமலை மூதூர் அந்தோனியார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் கல்வி பெற்று ஆசிரியராக கடமையாற்றினார். இவரது முதல் நியமனம் திருகோணமலை யோசப் கல்லூரியாக இருந்தது.
இவரது முதல் ஆக்கம் சுதந்திரன் பத்திரிகையில் வெள்ளைப் பூனை எனும் தலைப்பில் வெளியானது. இவர் ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக கவிதை, கட்டுரை, வில்லுப்பாட்டு என 500க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். மேலும் பிள்ளைமொழி, கீறல்கள், கட்டுரைப் பத்து, போரும் பெயர்வும், ஐம்பாலைம்பது, வள்ளுவர் அந்தாதி, முப்பத்திரண்டு, சிறு விருந்து, சோமம், எண் பா நூறு, ஐந்தொகை, இணைப்பு போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் கலைத்துறையின் மேம்பாட்டிற்கு ஆற்றிய மேலான சேவையினை பாராட்டும் வண்ணம் ஶ்ரீ லங்கா அரசினால் 2001ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி இவருக்கு வழங்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 149-151