ஆளுமை:செல்வராஜா, நடராஜா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:25, 6 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, ஆளுமை:செல்வராஜா, என். பக்கத்தை ஆளுமை:செல்வராஜா, நடராஜா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராஜா
தந்தை நடராஜா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1954.10.20
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராஜா, நடராஜா (1954.10.20 - ) யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளர்; நூலகவியலாளர். இவரது தந்தை நடராஜா; தாய் சிவபாக்கியம். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் டிப்புளோமா பட்டம் பெற்று யாழ்ப்பாணம், இந்தோனேசியா, கொழும்பு ஆகிய இடங்களில் நூலகராகக் கடமையாற்றிய இவர் 1991 இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தார்.

இலங்கைத் தமிழ் நூல்களின் நூல் விபரப் பட்டியலான நூல் தேட்டம் இவர் நூலகவியல் சார்ந்து ஆற்றிவரும் பெரும் பணியாகும். 2002 இல் நூல் தேட்டத்தின் முதற்தொகுதி வெளியானது. தொகுதிக்கு 1000 நூல்கள் வீதம் 10,000 நூல்களைப் பத்துத் தொகுதிகளாக 2015 வரை பதிவு செய்துள்ளார்.

அயோத்தி நூலக சேவைகள் என்ற பதிப்பகத்தினை நிறுவி நூல்களையும் நூலகவியல் என்ற காலாண்டிதழையும் வெளியிட்டார். நூலகவியல், யாழ்ப்பாண நூலகம் சார்ந்து 10 க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 25-32


வெளி இணைப்புக்கள்