ஆளுமை:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துத்தம்பிப்பிள்ளை, ஆறுமுகம்
தந்தை ஆறுமுகம்
தாய் சீதேவி
பிறப்பு 1858.04.18
இறப்பு 1917.11.02
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858.04.18 -1917.11.02) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்: தாய் சீதேவி. ஆரம்பக்கல்வியை பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே கற்றார். இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார்.

1884இல் காரைக்கால் சென்று அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றியதோடு 1885இல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். அத்தோடு 1893இல் யாழ்ப்பாணம் திரும்பிய இவர் வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார்.

இலங்கைச் சரித்திர சூசனம் (1883), காளிதாச சரித்திரம் (1884), பிரபோத சந்திரோதய வசனம் (1889), விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897), அபிதானகோசம் (1902), பாரதச் சுருக்கம் போன்ற நூல்கள் உட்பட மேலும் பல நூல்களையும் சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு) வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்) போன்ற இதழ்களையும் இவர் வெளியிடுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 189-192


வெளி இணைப்புக்கள்