ஆளுமை:செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர்
தந்தை திருஞானசம்பந்ததேசிகர்
தாய் சிவபாக்கிய அம்மையார்
பிறப்பு
ஊர் கரணவாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தி. செவ்வந்திநாததேசிகர் யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை திருஞானசம்பந்த தேசிகர்; தாய் சிவபாக்கிய அம்மையார். இவர் அக்காலத்தில் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிராசீன பாடசாலையிலேயே கல்வி கற்றார். பின்னர் கரணவாயிலே வித்தியா விருத்திச் சங்கம் என ஒரு சங்கத்தினையும், ஒரு வித்தியாசாலையும் ஆரம்பித்து நடாத்தி வந்தார்.

சின்னத்தம்பி புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர்களின் பிரபந்தங்களை தொகுத்து அச்சேற்றியுள்ளார். மாவைக் கந்தசாமி பேரில் மும்மணிமாலை, நல்லூர் கந்தசுவாமி பேரில் கோவை, தமிழ்மொழியாராய்ச்சி போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 197-199
  • நூலக எண்: 963 பக்கங்கள் 140-141