நிறுவனம்:யாழ்/ கொல்லங்கலட்டி சைவத்தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, நிறுவனம்:யாழ் கொல்லங்கலட்டி சைவத்தமிழ் கலவன் பாடசாலை பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ கொல்லங்கல...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கொல்லங்கலட்டி சைவத்தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கொல்லங்கலட்டி
முகவரி கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திரு.ஆ.வேலுப்பிள்ளை உபாத்தியாரின் பெரு முயற்சியால் 1869ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்திலே கொல்லங்கலட்டி என்னும் பிரதேசத்தில் அமைந்திருக்கும் விநாயகராலய முன்றலில் 40 மாணவர்களுடனும், மூன்று ஆசிரியர்களுடனும் சைவ வித்தியாசாலை என்ற பெயரில் இப் பாடசாலை ஆரம்பமானது.

1872ஆம் ஆண்டு இப் பாடசாலையை இரு மொழிப் பாடசாலையாக அரசினர் அங்கீகரித்து பதிவு செய்தனர். பின்னர் 1882இல் தமிழ்ப் பாடசாலையாக இது மாற்றப்பட்டதோடு 1918இல் பெண் பிள்ளைகளும் கற்கக்கூடிய கலவன் பாடசலையாக இப் பாடசாலை மாறியது.

ஆரம்ப பாடசாலையான இப் பாடசாலை 1930இல் மத்திய பாடசாலையாகவும், 1931இல் கனிஷ்ட பாடசாலையாகவும், 1933இல் சிரேஷ்ட பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவையொட்டி 1972ஆம் ஆண்டு பாடசாலை வரலாற்றையும் சாதனைகளையும் விளக்கும் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 36-37