ஆளுமை:சதாசிவம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை
தந்தை அருணாசலம்பிள்ளை
தாய் ஆனந்தப்பிள்ளை
பிறப்பு 1820.10.11
இறப்பு 1895.02.20
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. சதாசிவம்பிள்ளை (1820.10.11 - 1895) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருணாசலம்பிள்ளை; தாய் ஆனந்தப்பிள்ளை. இளமைக்காலத்தில் தமது ஊரிலுள்ளதொரு தமிழ்ப் பாடசாலையிலும், பின்னர் அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் கல்வி கற்ற பின் 1831ஆம் ஆண்டில் மானிப்பாய் ஆங்கிலப் பாடசலையில் சேர்ந்தார். முதலில் மானிப்பாய் சாவகச்சேரியிலும், உடுவிலிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் சில காலம் உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றினார்.


தமிழ் புலவர்களின் வரலாற்று நூலாகிய 'பாவலர் சரித்திர தீபகம்' என்னும் அரும்பெரும் நூலை இவர் எழுதியதோடு இரட்சாபெருமான் மீது பாடிய திருச்சதகம், மெய்வேத சாரம், நன்னெறிக் கொத்து, இல்லற நொண்டி, கீர்த்தனா சங்கிரகம், வெல்லை அந்தாதி, சாதாரண இதிகாசம், வான சாத்திரம், நன்னெறிக் கதா சங்கிரகம், பாவலர் சரித்திர தீபகம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 201
  • நூலக எண்: 300 பக்கங்கள் 28-29
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 227
  • நூலக எண்: 963 பக்கங்கள் 101-103


வெளி இணைப்புக்கள்