நிறுவனம்:யாழ்/ அரியாலை நாயன்மார்கட்டு வெயிலுகந்த பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:பேச்சி அம்மன் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ அரியாலை நாயன்மார்கட்டு வெயிலுகந...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை நாயன்மார்கட்டு வெயிலுகந்த பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி அரியாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நாயன்மார்கட்டு வெயிலுகந்த பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிராமத்தில் நாயன்மார்கட்டு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தனது கோட்டையின் கீழைக்கோபுரவாயிலிலே தான் வெளியே போகும் போதெல்லாம் தரிசித்து வழிபாடு செய்து போவதற்காக அமைக்கப்பட்டது என்பதை புராதன யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலிருந்து அறியமுடிகின்றது.

வரலாற்றுக்கால இவ்வாலயம் இன்று துவிதள கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரிசன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, வாகன சாலை, மடப்பள்ளி, மணிக்கூட்டுக் கோபுரம், வைரவர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், ஆதி விநாயகர் ஆலயம் ஆகியவற்றைக் கொண்ட பெரிய ஆலயமாக விளங்குகின்றது.

இவ் ஆலயத்தில் தினமும் மூன்றுகாலப் பூஜைகளும், வருடாந்த மகோற்சவ விழா பங்குனி உத்தர நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு முதற் பத்துத் தினங்களுமாக நடைபெறுகின்றது.

வெளி இணைப்பு