ஆளுமை:அந்தோனிக்குட்டி அண்ணாவியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
பிறப்பு
ஊர் தமிழ்நாடு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தினரான இவர் பிறருக்கு கல்வி கற்பித்துக் கொண்டும், தமிழ் நூல்களை இயற்றிக் கொண்டும் சமயத் தொண்டு புரிந்துவந்தார். இவரது போக்கு அக்காலத்திலிருந்த பாதிரிமாருக்குப் பிடிக்காத காரணத்தால் இவர் தென்னிந்தியாவை விட்டு நீங்கி யாழ்ப்பாணத்தில் குடியேறினார்.

இவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பத்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் எனும் திரட்டு நூலாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 07-08

வெளி இணைப்புக்கள்