ஆளுமை:இராமசேது, நாராயணபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 23 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமசேது, ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமசேது, நாராயணபிள்ளை
தந்தை நாராயணபிள்ளை
பிறப்பு 1941.08.15
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா. இராமசேது (1941.08.15 -) யாழ்ப்பாணம் திருநெவேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாரயணபிள்ளை. இவர் சிற்ப்பங்களை சீமேந்தினாலும் கழிவுக் கடதசிகளினாலும் உருவாக்கும் திறமை படைத்தவராவார்.

திருகோணமலை பாண்டிருப்பு அம்மன் கோவில், மட்டக்களப்பு வற்றாப்பளை அம்மன் ஆலயம், முல்லைத்தீவு உலகளந்த பிள்ளையார், புதுக்குடியிறுப்பு புதூர் நாகதம்பிரான் ஆலயம், புளியங்குளம் கந்தசாமி கோவில், மட்டுவில் ஞன வைரவர் கோவில் திருநெல்வேலி கண்ணகை அம்மன் கோவில் உட்பட மேலும் ஈழத்தின் பல கோவில்களிலும் இவர் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு சரஸ்வதி சிலை இவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு கோவில்களுக்குச் சாஸ்திர விதிகளுக்கு அமைவாக சிற்ப வேலைகளையும், வர்ணம் பூசுதல் வேலைகளையும் இவர் அழகுறச் செய்து கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 205