நிறுவனம்:மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=மாத்தளை ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மாத்தளை
ஊர் மாத்தளை
முகவரி பிரதான வீதி, மாத்தளை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை எனும் இடத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் இந்த ஆலயம் ஐந்து இரதங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் 108 அடி உயரமான இராஜகோபுரமே இலங்கையின் மிக உயரமான இராஜகோபுரமாக அமைந்துள்ளது. கொடியேற்றத்தை அடுத்து இந்த இரதோற்சவம் 21 நாட்கள் நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன் (பிள்ளையார்), சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து வீதியூடாகப் பவனிவருவார்.

இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன. பின்னர், படிப்படியாக திருவிழாக்களும் சப்பறத்தேர் எடுக்கும் வழக்கமும் தோன்றின. 1934 ஆம் ஆண்டளவில் சப்பறத்தை மாற்றி விநாயகரையும் சிவன்,அம்பாள், முருகன் இரதோற்சவமும் நடைபெற்றன.

1955 ஆம் ஆண்டு இராஜகோபுரம் உட்பட பல ஆலய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தில் மகா மண்டபம் உட்பட முருகன் கோயில், வசந்த மண்டபம், விஷ்ணு கோயில், நாயன்மார் கோயில், மீனாட்சி, சிவன் கோயில் என்பன திருப்பணி செய்யப்பட்டன.

1977 ஆம் ஆண்டு அம்பாளுக்கு சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய இரதங்களும் எரியூட்டப்பட்டதுடன் கல்யாண மண்டபம் உட்பட பல பகுதிகள் சேதமாக்கப்பட்டு பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டமையால் ஆலயவளர்ச்சி குன்றியது.

1992 ஆம் ஆண்டில் சித்திரத் தேரையும் ஏனைய இரதங்களையும் அமைக்கும் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இவ்வாலயத்தில் அமைந்துள்ள 108 அடியைக் கொண்ட இராஜகோபுரம் இந்து சமய மக்களின் ஒற்றுமையையும் இந்து சமய திருப்பணியின் வளர்ச்சியையும் உயர்த்தி நிற்கும் அற்புதக் கோபுரமாகும்.