ஆளுமை:தேவகுமாரன், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவகுமாரன், கந்தசாமி
தந்தை கந்தசாமி
பிறப்பு 1954.10.28
ஊர் இணுவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. தேவகுமாரன் (1954.10.28 - ) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை கந்தசாமி. யாழ்ப்பாணம் இந்து இளைய தம்பி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் இடை நிலை கல்வியையும் கற்ற இவர் கிளே, பிளாஸ்ரிக் ஆகியவற்றில் உருவங்கள் செய்வது, அச்சுக்கள் செய்வது, சிலைகள் உருவாக்குவது ஆகிய செயற்பாட்டினை ஆசிரியர் சின்னத்துரை என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டு பின்னர் 1972ஆம் ஆண்டு இந்தியா சென்று திருச்சி மலைக்கோட்டையில் கணேசன் கலைக்கூடத்தின் ஆசிரியர் எம் வி. ராஜங்கம் என்பவரிடம் ஓவியம் சம்பந்தமான விளக்கங்களையும், நுணுக்கங்களையும் கற்றுத் தேறி சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் வந்த இவர் தன் கலைச் செயற்பாட்டை தொழில் ரீதியாக மேற்கொண்டு புகைப்படங்களை எடுப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான கலைஞராக விளங்கியதுடன், பல ஆலயங்களுக்கு திரைச் சீலைகள் வரைந்துமுள்ளார். அவற்றுள் கதிர்காமம் திருமுருகன் ஆலயத்திற்கு மூன்று முகப்புத் திரைச் சீலைகள், வள்ளியம்மன் வாயிலுக்கு மூன்று திரைச்சீலைகள் இவரால் வரையப்பட்டவை ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 195