ஆளுமை:ஜெகநாதசர்மா, சுப்பிரமணிய ஐயர்
பெயர் | ஜெகநாதசர்மா, சுப்பிரமணியஐயர் |
தந்தை | சுப்பிரமணியஐயர் |
பிறப்பு | 1921.05.11 |
ஊர் | நல்லூர் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சு. ஜெகநாதசர்மா (1921.05.11 - ) யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சுப்பிரமணியஐயர். இவர் கண்ணாடி வகை ஓவியங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்த காலத்தில் இவ்வகை ஓவியங்களை உருவாக்கி வர்த்தக ரீதியாக செயற்பட்டு வந்தார்.
1941ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு வரை இத் தொழிலோடு ஆலயப் பூசகராகவும், நிரஞ்சனா அச்சக உரிமையாளராகவும் கடமையாற்றிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக திறப்பு விழாவின் போது இரண்டரையடி உயர கண்ணாடியில் இலட்சுமி படம் வரைந்தும் கொடுத்தார். மேலும் தமிழ்த் துறையின் வேண்டுதலின் பேரில் இருபத்தைந்து மூர்த்தங்களைச் திரைச் சீலையில் வரைந்தும் கொடுத்தார். வெண்கலத் தகடுகளில் இயந்திரங்கள் செய்வதிலும் ஆற்றல் கொண்டு விளங்கினார்.
இவரின் கலைப்பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை 2002ஆம் ஆண்டு கலைஞானச்சுடர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 185