ஆளுமை:விமலநாதன், நாகலிங்கம்
பெயர் | விமலநாதன், நாகலிங்கம் |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | 1964.10.24 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா. விமலநாதன் (1964.10.24 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர், இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் படித்து பின் பட்டதாரியான இவர் இக் கல்லூரியின் ஆசிரியர் ஆவார். இவர் 1988ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம் நடத்திய காத்தவராயன் கதைவழிக்கூத்து எனும் நாடகத்தில் நடித்ததன் மூலம் கலைச் செயற்பாட்டில் கூடிய ஆர்வம் காட்டி வரலனார்.
நாடகம் சார்ந்த நுண்கலையை, அதன் செய்றதிறனை அரங்கச் செய்ற்படுகளை கற்று வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும், அரங்கியலுமான ஆசிரியர் தராதரப்பத்திரம் பெற்றுள்ள இவர் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் இணைந்து அக் கழகத்தின் கலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். அக்கழகம் வெளியிட்ட இசை நாடகம், காத்தான் சிந்து நடைக் கூத்து பாடல்கள் கொண்ட இறுவெட்டுக்களில் பாடித் தன் இசைப் புலமையை வெளிக்கொணர்ந்தார்.மேலும் இக் கழகம் வெளியிட்ட மரபு வழி இசை நாடகங்கள் என்னும் நூலின் துணைப் பதிப்பாசிரியராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் ஶ்ரீ பாஸ்கர் இசைக்குழுவின் பாடகராக விளங்கும் இவர் வில்லிசை பக்கப்பாட்டுக் கலைஞராகவும் விளங்கியுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்திலும் சாவித்திரியாக, சத்தியவானாக, நாரதராக பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளமையோடு எந்தப்பாத்திரத்திலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் திறமை மிக்க கலைஞராக இவர் விளங்குகிறார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 182