ஆளுமை:சந்திரகுமாரன், அருளானந்தம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரகுமாரன், அருளானந்தம்
தந்தை அருளானந்தம்
பிறப்பு 1949.11.28
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. சந்திரகுமாரன் (1949.11.28 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருளானந்தம். சிறுவயது முதல் நாடகங்கள், சினிமா பார்த்ததிலிருந்து நகைச்சுவை காட்சிகளில் ஏற்பட்ட ரசணை காரணமாக நகைசுவை நாடகங்களை இவர் எழுத ஆரம்பித்தார்.

மீண்டும் உடையார், மாப்(பிழை) மாமா, நடுத்தெரு ஞானப்பிரகாசம், பரியகாரி பரமசிவம், கண்டறியாத கலியாணம், அமுக்கவெடி ஆறுமுகம், போன்ற நகைச்சுவை நாடகங்களை இவர் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார். அரியாலை மண்ணில் பாரம்பரிய கலை வடிவங்களான பொய்க்கால் குதிரைப்படம், பொம்மலாட்டம் ஆகியவற்றை இன்று வரை மேன்னிலைப்படுத்தி வரும் இக்கலைஞர் யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் கல்விசார் ஊழியராக பணியற்றி வருகின்றார்.

அரியாலை ஐக்கிய கழகம் இக் கலைஞரின் கலைப் பணியைப் பாராட்டி நகைச்சுவை நடிகர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மேலும் அரியாலை சுதேஷிய திருநாட் கொண்டாட்ட 2005ஆம் ஆண்டு நிகழ்வின் போது நாடகக் கலைஞருக்கான விருதினை இவர் பெற்றுக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 173