ஆளுமை:மதியாபரணம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மதியாபரணம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதியாபரணம், கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1937.03.25
இறப்பு 2000.07.22
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா.மதியாபரணம் (1937.03.25 - 2000.07.22) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த ஓர் நாட்டுக்கூத்து கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. சிறுவயதிலேயே தந்தையார் பாடும் நாட்டுக் கூத்துக்களைப் கேட்டும் அவற்றை மனப்பாடம் செய்தும் தானும் தந்தையார் போலவே நாட்டுக்கூத்துக்களுக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் நாட்டுக் கூத்தில் காணப்படும் கதையம்சம், மேடை வரவு கவி, விருத்தம், தரு கொச்சகம், கல்வெட்டு, ஆசிரியம், நாட்டுக் கூத்தின் ஆட்டம் போன்ற அம்சங்களை முற்றுமுழுதாக உள்ளடக்கி குசலவன் நாட்டுக் கூத்தினை 1998ஆம் ஆண்டு பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடாத்திய நாட்டுக்கூத்து போட்டியில் அரங்கேற்றி இரண்டாவது பரிசினைச் சுவீகரித்துக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 161