ஆளுமை:சபாபதிப்பிள்ளை, பெரியதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 19 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாபதிப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாபதிப்பிள்ளை பெரியதம்பி
தந்தை பெரியதம்பி
பிறப்பு 1885
இறப்பு 1964
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெ.சபாபதிப்பிள்ளை (1885 - 1964) யாழ்ப்பாணம் அரியலையை பிறப்பிடமாகக் கொண்ட இசைக் கலைஞர், நாடகக் கலைஞர். இவரது தந்தை பெரியதம்பி. இவர் 1940களில் அறிமுகமான சங்கீத இசைக்கூத்துக்களை அரியாலை மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடு சென்றும் ஆற்றுகைப்படுத்தினார். இச் சங்கீத இசைக் கூத்தே நவீனமயப்படுத்தப்பட்டு இசை நாடகம் என்னும் பெயரைப் பெற்றது.

இவரது பனை ராசன் என்னும் கற்பனைச் சரித்திர இசை நாடகம் இவருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. இவ் இசை நாடகம் யழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் முதன் முதலில் மேடையேறியது. மேலும் அரியாலைச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களைச் சேர்த்த அல்லி அர்ச்சுனா, அனுமார்கதை, வள்ளி திருமணம் ஆகிய சங்கீத கூத்துக்களையும் இவர் மேடையேற்றியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 150