ஆளுமை:ஞானசேகரம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானசேகரம், செல்லத்துரை
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1918.06.01
இறப்பு 1990.05.16
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. ஞானசேகரம் (1918.06.01 - 1990.05.16) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் ஆரம்பக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மற்றிக்குலேசன் வரையும் பயின்றார். மாணவப் பருவத்திலேயே இசை, நடனம், நாடகம் ஆகிய கலைத்துறையில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய இவர் இந்தியா சென்று சிதம்பரத்தில் முறைப்படி பரதநாட்டியம், கதகளி ஆகிய கலைகளை கற்றுத் தேறினார்.

இவர் 1936 - 1955 வரை பகுதிநேர நடன ஆசிரியராக வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் சேவையாற்றினார். இவரது திறமைக்குச் சான்றாக 1940இல் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சியில் இவரது சிவதாண்டவம் நடன நிகழ்ச்சியை பாராட்டி நீலக்கல் பதித்த பொன் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டத்தை குறிப்பிடலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 140