ஆளுமை:நல்லையா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லையா, கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு 1912.03.09
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. நல்லையா (1912.03.09 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர், ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. பெட்டிக்கார நல்லையா, கீதாஞ்சலி நல்லையா, வி.கே.நல்லையா என பல பெயர்களாலும் அழைக்கப்பட்ட இவர் இந்தியா சென்று அங்கு வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கதகளி, பரதம் ஆகிய கலைகளை உயர் தகைமைகளை கொண்ட கலைஞர்களிடம் கற்றுத் தேறினார்.

பின்னர் தாயகம் திரும்பி பல கல்லூரிகளில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் வாழ்ந்த கேசாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் யாழ் கலாஷேத்திரம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கலைச் சேவையை புரிந்து வந்தார். தாம்பாள நடனம், குச்சுப்புடி நடனம் ஆடுவதில் ஆற்றல் மிக்க கலைஞராக விளங்கிய இவர் ஈழத்திருநாட்டில் குச்சுப்புடி நடனத்தை முதலில் அறிமுகம் செய்த கலைஞர் ஆவார்.

கரவை வாணி கலை மன்றத்தின் சார்பில் இவருக்கு கீதாஞ்சலி என்ற பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்துறையைச் சேர்ந்த தே.பெ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் இலங்கை சங்கீத சபை பொன் விழாவின் போது பொன்னாடை போர்த்தி நாட்டிய ஆசிரியமணி என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 139
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நல்லையா,_கந்தையா&oldid=162161" இருந்து மீள்விக்கப்பட்டது