ஆளுமை:சாந்தினி, சிவநேசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 19 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாந்தினி சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தினி சிவநேசன்
தந்தை ஏரம்பு சுப்பையா
பிறப்பு 1952.01.03
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சாந்தினி (1952.01.03 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை ஏரம்பு சுப்பையா. இவர் ஆரம்பகால நடனப் பயிற்சியை தனது தந்தையிடமும் மேலதிக பயிற்சியை இந்தியா சென்று அடையாறு பத்மஶ்ரீ கே. லக்‌ஷ்மணன், கே. இராமராவ், நாகமணி ஶ்ரீனிவாசராவ் ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார். சென்னை பரதசூடாமணியில் பரதம் டிப்ளோமா பட்டமும், பத்மபூஷன் குருஜி கோபிநாத் தங்கமணி, சங்கரப்பிள்ளை ஆசான் ஆகியோரிடம் பயின்று திருவனந்தபுரம் விஸ்வகலாஷேத்திரத்தில் கதகளி டிப்ளோமா பட்டமும் பெற்றார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கற்பித்து வந்த இவர் பின் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகப் பணிபுரிந்து 1997ஆம் ஆண்டு ஶ்ரீ லங்கா கல்வி நிர்வாக சேவை சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாத நுண்கலைப் பீடத்தின் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர் க.பொ.த. (சா/த, உ/த) ஆகியவற்றின் செயன்முறைப் பரீட்சை தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். தந்தையார் ஏரம்பு சுப்பையாவினால் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனம் நடனப்பள்ளியை தொடர்ந்தும் பேணி நடத்தி வரும் இவரின் கலைச்சேவையைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை கலைஞானச்சுடர் விருது வழங்கி 2002ஆம் ஆண்டு கௌரவித்தது. 2005ஆம் ஆண்டு அதியுயர் ஜனாதிபதி விருதான கலாகீர்த்தி விருதினையும் இவர் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 145