ஆளுமை:வரதராஜன், டானியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராஜன், டானியல்
தந்தை டானியல்
பிறப்பு 1953.10.25
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டா.வரதராஜன் (1953.10.25 - ) யாழ்ப்பாணம் அரியலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை டானியல். 1965ஆம் ஆண்டு முதல் பிரபல சங்கீத வித்துவான் ஏ.எஸ்.இராமநாதனிடம் முறையாக மிருதங்க இசையைக் கற்றறிந்த இக் கலைஞர் கடம், கெஞ்சிரா ஆகிய வத்திய இசைகளையும் கற்று யாழ்ப்பாணம் கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் தனது மிருதங்க இசைஅரங்கேற்றத்தை நிறைவு செய்தார். வட இலங்கை சங்கீத சபையில் பயின்று ஆசிரியர் தரத்தில் சித்தி பெற்று கலா வித்தகர் என்ற பட்டத்தினையும் பெற்றார்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றம் வருடா வருடம் நடாத்தும் இசை விழாவில் கலந்து சிறப்பிக்கும் இவர் 1977ஆம் ஆண்டு இம் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட மிருதங்க இசைப் போட்டியில் கலந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். 1996ஆம் ஆண்டு முதல் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் மிருதங்கப் போதனாசிரியராக பணியாற்றி வந்த இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் கச்சேரிகளை நிகழ்த்தி தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 127