ஆளுமை:இராஜேஸ்வரன், நல்லையா
பெயர் | இராஜேஸ்வரன், நல்லையா |
தந்தை | நல்லையா |
பிறப்பு | 1957.04.30 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ந.இராஜேஸ்வரன் (1957.04.30 - ) யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றார். பரம்பரை வழியாக இக் கலைத் தொழிலை மேற்கொண்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது இளவயதிலிருந்தே நாதஸ்வரம் கற்று வந்தார். இவர் மணிக்கணக்கில் நாதஸ்வரம் வாசிக்கும் வல்லமைப் பெற்றவரவார்.
இவரின் நாதஸ்வர இசை ஞானத்தைப் பாராட்டி காரைநகர் வாரிவளவு விநாயகர் ஆலய தேவஸ்தானம் இவருக்கு இசை பூபதி என்னும் பட்டத்தையும், கல்வியங்காடு இலங்கை நாயகி ஆலயத்தில் அமரர் வீரமணி ஐயர் ஞான சுரபி என்னும் பட்டத்தையும், திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் நாதகானவாருதி பட்டத்தையும், கல்வியங்காடு வீரபத்திரர் தேவஸ்தானம் ஸ்வரநாத ஸங்கீரணி பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன. மேலும் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள கல்யாண முருகன் ஆலயத்தின் பதினைந்தாம் வருட மகோற்சவத்தில் கலந்து கொண்டு நாதஸ்வரத்தினை இசைத்தமைக்காக இவரை அவ் ஆலய சபையினர் பாராட்டிக் கௌரவித்து கான பாரதி எனும் பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 129