ஆளுமை:கோகிலமணி, ஜெகானந்தராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோகிலமணி ஜெகானந்தராசா
தந்தை டானியல்
பிறப்பு 1951.06.29
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெ.கோகிலமணி (1951.06.29 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை டானியல். சங்கீத டிப்ளோமா, படிப்பின் கல்வி டிப்ளோமா, வட இலங்கை சங்கீத சபையில் சங்கீத ஆசிரியர் தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தி பெற்றதன் மூலம் இசைக்கலைமணி, கலாவித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

1984ஆம் ஆண்டு சங்கீத ஆசிரியையாக கிளிநொச்சி புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நியமனம் பெற்று 1991ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றி, பின்னர் 1991இல் இருந்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம் நடத்திய இசை விழாக்களிலும், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நடத்திய நல்லூர் முருகன் தெய்வீக இசை அரங்குகளிலும் இவர் இசைப் பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 123