ஆளுமை:தனபாலசிங்கம், முத்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 15 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தனபாலசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனபாலசிங்கம், முத்தையா
தந்தை முத்தையா
பிறப்பு 1950.08.19
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு.தனபாலசிங்கம் (1950.08.19 - ) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மெல்லிசை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. தனது பத்தொன்பதாவது வயதிலிருந்து மெல்லிசை வாத்தியக் கலைஞராக செயற்பட்டுவரும் இவர் நவீன இசையுலகில் பொங்கோ, கொங்கோ, ட்றம்ஸ் ஆகிய வாத்திய இசைக்கருவிகளில் தன்னை முழுமையாக ஈடுபடித்தியதோடு இக் கலைஞர் யாழ்ப்பாண மாணகர சபையில் பணியாற்றி வருகின்றார்.

1971ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் கொங்கோ ட்றம்ஸ் என்னும்வாத்திய இசைக் கருவியை இவர் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அத்தோடு 1969ஆம் ஆண்டு கில்னர் கல்லூரியின் இசைக் குழுவுடன் இணைந்து முதன் முதாலாக மேடையேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வானொலியிலும் இவர் கொங்கோ ட்றம்ஸ் வாத்தியக் கலைஞராக பணியாற்றி பலரின் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய முன்னணி இசைக்குழுவான சாரங்கா இசைக்குழுவிலும் நீண்டகாலம் பணியாற்றினார். மில்க்வைற் கனகராசாவாலும், பிரபல இசைநாடகக் கலைஞர் அரியாலையூர் இரத்தினம் அவர்களாலும் இசைநிகழ்வுகளின் போது இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 120