ஆளுமை:நவரத்தினம், நா. வி. மு.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 15 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நவரத்தினம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவரத்தினம், நா. வி. மு.
பிறப்பு 1950.06.27
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.வி.மு.நவரத்தினம் (1950.06.27 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக இசை கலைஞர், பண்ணிசை இசை கலைஞர். இவர் இசைத் துறையில் சங்கீத பூஷண், பண்ணிசை உயர் டிப்ளோமா, ஆசிரியர் கற்பித்தல் டிப்ளோமா, இசை முதுதத்துவமாணி, இசைக் கலாநிதி, தெலுங்கு உயர் சான்றிதழ், ஆங்கில உயர் சான்றிதழ் ஆகிய பட்டச் சான்றிதழ்களை இந்தியாவிலும், இலங்கையிலும் பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதுநிலை இசை விரிவுரையாளரக பணியாற்றினார்.

1981ஆம் ஆண்டு முதல் வட இலங்கை சங்கீத சபைப் பாடத்திட்டத்தில் பண்ணிசையை ஒரு பாட அலகாக இணைத்ததுடன் நூற் றுக்கும் மேற்ப்பட்ட கருத்தரங்குகளை குறித்த காலத்தில் கோப்பாய் கல்விமூலவள நிலையம் மூலம் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், வவுனியா மாவட்டங்களில் பொறுப்பேற்று நடத்திப் பலரின் பாராட்டுதலைப் பெற்றார். இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் இசைத் துறையின் முதலாவது சிரேஷ்ட விரிவுரையாளர் என்ற தரத்தை இவர் பெற்றதுடன் 1999 - 2004வரை யாழ் பல்கலைக்கழக இசைத்துறை தலைவராகவும் இருந்துள்ளார்.

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையின் ஆய்வை மிகச் சிறப்பாக புரிந்த இக் கலைஞர் இசைத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இதனால் தமிழ் நாட்டின் முதலாவது இசைக் கலாநிதி என்ற பெயரைப் பெற்று இந்திய, இலங்கை இசைக் கலை அறிஞர்களின் பாராட்டுதலையும் இவர் பெற்றுக் கொண்டுள்ளார். அத்தோடு திருச்சி முத்தமிழ் மன்றக் கலைவிழாவில் சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.

சென்னை மாநில கவணர் விருது, ஞானசிரோன்மணி - இலங்கை தேசிய விருது, இசைசோதி விருது, சாகித்திய இசைப் பேரரசு விருது ஆகிய பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் 1974ஆம் ஆண்டு அகில இலங்கை இந்திய வானொலிக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரது பணிக்கு கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 119